நமக்கு தெரிந்த பாரதியும்
நமக்கு தெரியாத சுப் பிராமணிய பாரதி"யார்"...?
செயற்க்கையாக
உருவாக்கப்பட்ட பாரதி
ஆம் தமிழனுக்கு ஒரு அதீத புத்தி
ஒன்று உண்டு
அது என்னவென்றால் தமிழை போற்றி எவராவது
ஒருவர்
கவிபாடிவிட்டால்
அவர் தமிழர் என்றும் அவர்
தமிழுக்காக
பாடுபட்டார்
என்றும் நினைத்துவிடுவார்கள் இந்த மறதித் தமிழர்கள்
தான் வாழ்ந்த காலம் முழுவதும் “இந்துத்துவாவையும்”
ஆரியப் பார்ப்பனியத்தையுமே” தூக்கி திரிந்த அந்த பாரதியைதான் ஆரியப் பார்ப்பனியம் திட்டமிட்டு
“மஹாகவி”யாக்கியது
ஒரு வேலை தமிழனுக்குள்
பாரதிதாசன், காசி ஆனந்தன், போன்ற கவிஞர்கள் வந்துவிடலாம்
வந்தால் அவர்களை
ஆரியப் பார்ப்பனர்கள் மஹாகவியாக ஏற்க்க முடியாது என்பதால் அன்றைக்கே பாரதியை மஹாகவியாக்கினார்கள்
பார்ப்பனியம் தமிழர்களிடையே
என்றைக்கும் திட்டமிட்டே ஒரு கருத்தை பரப்பும் அதுபோலத்தான் இந்த மஹாகவி பட்டமும்
ஜாதி ஒழிப்புக்கு
கூட தமிழர்கள் பாரதியைதான் முதலில்
அடையாளம் காட்டுவார்கள்
ஏன் என்றால் அவர்தானே
“ஜாதிகள் இல்லயடி
பாப்பா என்று பாட்டுப்பாடினார்” எனவே அவர்தான்
ஜாதி ஒழிப்புக்கு
பாடுபட்டவர் என்றும் அந்த அறியா தமிழர்கள் சொல்வதுண்டு
இன்னும் பாரதியை
பற்றி தோழியர் “நான் தமிழினி” அவர்கள்
ஆதாரம் கொண்டு
பாரதியின் முகத்திரையை கிழிக்கின்றார்
பாரதியார் சாதி மதத்தை ஆதரிப்பவர்
********************************************************
-நான் தமிழினி
"ஆரியன் என்றாலும் பார்பனன் என்றாலும்
பிராமணன் என்றாலும் ஒன்றே "
-தேவனேய பாவனார்.
.
பார்பன ராஜ்ஜியம்:
"உலகம் கடவுளுக்கு உட்பட்டது
கடவுள் மந்திரத்துக்கு உட்பட்டது
மந்திரம் பார்பானுக்கு உட்பட்டது"
.மந்திரம் ஓதும் சமஸ்கிருதம் தான் கடவுள் மொழியாம்..
பார்பனன் மட்டும் தான் அர்ச்சகர் ஆக முடியுமாம்.
தமிழன் சூத்திரனாம்.தமிழன் கோவில் (மூலஸ்தானம்)கருவறைக்குள் செல்ல கூடாதாம்.
.
பாரதியார் ஒரு (ஐயர்)பார்பனன்.அதாவது பிராமணர்(ஆரியன்).
.
1907 ம் ஆண்டு சுதேசமித்திரனில்
"வந்தே மாதரம்" பாடலில் பாரதி கூறியது :
.
"வாழிய நல் ஆரிய தேவியின்
மந்திரம் வந்தே மாதரமே...
ஆரிய பூமியில்
நாரியரும் நர
சூரியரும் சொலும்
வீரிய வாசகம் வந்தே மாதரம்"
.
இங்கு நம்முடைய நாட்டை ஆரியர்களின் பூமி என்கிறார்.
.
.
.
"ஜாதிகள் இல்லையடி பாப்பா -குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்
............................................
சேத மில்லாத ஹிந்து ஸ்தானம் -இதை
தெய்வம் என்று கும்பிடடி பாப்பா"
.
இந்த பாடலில் பாரதியார், ஹிந்து ஸ்தானத்தை தெய்வமாக கும்பிட வேண்டும் என்கிறார்.இது பாரதியின் இந்து மத பற்று.
.
( 1915-ல் பிப்ரவரி "ஞானபானு" என்ற இதழில் "சாதி உயர்வு இல்லை பாப்பா" என்று தான் முதன்முதலில் அச்சானது..
பின்பு "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று யாரால் மாற்றப்பட்டது என்பது ஆய்வுக்குரியது)
.
.
.
"தீபாவளி ஓர் ஜாதிய மகோத்ஸவ தினம்.
இதை நாம் கொண்டாட வேண்டியது அவசியமே"
-பாரதியார்
(ஆதாரம்:நூல்:-பாரதி புதையல் 2ம் பாகம்.பக்கம்.73)
.
.
.
1917 ல் தெலுங்கர்கள் தனி நாடு வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்த போது பாரதியார் கூறியது :
.
"ஆந்திராவை தனி மாகாணமாக அறிவிக்க வேண்டாம்.ஆப்கான் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்கலெல்லாம் ஒரே கூட்டம்..ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா,ஒரே உடம்பு,ஒரே குடல்."
(ஆதாரம்: நூல்-பாரதி தமிழ். ஆசிரியர் -பெ.தூரன். பக்கம்.255)
.
.
.
"பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்திய
பாழடைந்த கலியுகம் "
.
அதாவது, இது கலிகாலம்,பார்பனர் குலம் கெட்டு அழிந்து விட்டதே என்று வருத்தப்பட்டு எழுதி இருக்கிறார் பாரதி.
(ஆதாரம்: பாரதியார் கவிதைகள்-பக்கம்.311)
.
.
.
"வேதம் அறிந்தவன் பார்ப்பான் -பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் -தண்ட
நேமங்கள் செய்பவன் நாயய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி
நாலு வகுப்புமிங்கு ஒன்றே -இந்த
நான்கில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே -செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி "
.
இங்கு பிராமணன்,சத்திரியன்,வைசியன் ,சூத்திரன், என்ற நான்கு குலங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பாரதி.நாலு குலமும் அழிந்தால் மனித்ஹா இனமே அழிந்து விடுமாம்.
அப்படியென்றால் எப்போதும் பார்பானுக்கு சூத்திரன் உழைத்து போடனும்..பார்பான் மட்டும் கோவில் பூசை செய்துவிட்டு நோகாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் பாரதி.
(ஆதாரம்: பாரதியார் கவிதைகள்-பக்கம்.371)