புதன், 13 ஆகஸ்ட், 2014


அண்டி பிழைக்க வந்த ஆரியக் கூட்டம்
அனைத்து இடத்தையும் ஆக்கிரமித்து செய்து
மண்ணின் மைந்தர்களை இழி மக்களாக்கியது

தங்களை எவன் இழி மக்களாக ஆக்கினானோ அதே ஆரியக் கூட்டத்தை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான்

அது அவர்களின் பிழை அல்ல. இன்று அல்ல நேற்று அல்ல இது அரசாட்சி காலத்தில் இருந்தே மண்ணின் மைந்தர்களின் வாழ்வில் புகுத்தப்பட்டுள்ளது

பிழைக்க வந்த ஆரிய வந்தேறி கூட்டத்திற்குக் கோயில் கட்டி
கோயில் கருவறையையும் எழுதிக்கொடுத்தான்

மன்னனே அரியணை ஏற வேண்டும் என்றால் கூட
ஆரியப் பார்ப்பான் நாள் பார்த்துக்கொடுக்கும் நிலை இருந்தது.
இன்றைக்கும் மோடி அரசானாலும் ஜெயலலிதா அரசானாலும் அதையே கடைபிடிக்கின்றார்கள்

தன் நாட்டு மக்களுக்குக் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்குப்
பெயர் வைக்கக் கூட ஆரியப் பார்ப்பானே குத்தகை எடுத்துக்கொண்டு தமிழுக்கு முட்டுக்கட்டை போட்டான்-
ஆரிய சமஸ்கிருதப் பெயர் வைத்து!

ஒண்டிப் பிழைக்க வந்த ஆரிய பார்ப்பனக் கூட்டம் மண்ணின்
மைந்தர்கள் வணங்கும் கோயில் கருவறையை
ஆக்கிரமித்தது

அவர்களின் பாட சாலையை ஆக்கிரமித்து
வேத பாடசாலையாக்கி அதையும் தனதாக்கிக்கொண்டது.

நீதி அரசாண்ட மைந்தர்களை "மநு நீதி" என்று
காரணம்காட்டி, இழி மக்களாக்கி
நீதித் துறையை ஆக்கிரமித்தனர் ஆரியப் பார்ப்பனர்கள்

இந்திய மண் முழுவதும் அரசாண்ட திராவிடரை
இன்று ஆரியப் பார்ப்பனியமே அரசாளுன்றது

தமிழர்களே! நம் இனப் பகைவர் யார் என்று
இனம்கண்டு எந்த திசையில் இருந்து வந்தார்களோ
அதே திசையை நோக்கி விரட்டியடிப்போம்
வாருங்கள்!!

                                               

                                           -செல்வேந்திரன் கு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக