புதன், 6 ஆகஸ்ட், 2014

குழம்பிய குட்டையில் பதவி மீனைப் பிடிக்க எண்ணுகிற 
பார்ப்பன அடிவடிகளான சில தமிழ் தேசியவாதிகள், 
திராவிடத்தை மாயை என்று எழுதியும் பேசியும் வருகின்றனர். 
அவர்களுக்குப் பின்னாலும் சிலர் வரக்கூடும் என்பதால். 
முதலில், ’மானமும் அறிவுமே’ - திராவிடம் கொடுத்த சொத்து தானே. 
அதையும் தாண்டி, உரிமையும் திராவிடத்தின் அருட்கொடை தான். இப்படி மானம், 
அறிவு, உரிமை என்ற இந்த மூன்று தலைப்புகளின் கீழ் விளக்கமாக திராவிடத்தின் பங்கைச் சொல்ல முடியும். சுருக்கமாகச் சொன்னாலே போதுமென்றாலும் ஒன்றைச் சொல்லலாம். அதாவது, நம்மை அப்படிக் கீழ் நிலைக்கு ஆளாக்கிய பார்ப்பனர்களையும் நம்மையும் ஒப்பிட்டு ஒன்றைச் சொல்லலாம்.
அரசு நிர்வாகத்தில் எல்லா பணிகளிலும் இந்த நாட்டுக்குச் சொந்தமில்லாத பார்ப்பனர்களே கோலோச்சி மண்ணின் மக்களான நம்மை காலம் காலமாக வஞ்சித்து வந்த நிலையில், திராவிடர் இயக்கம் வந்த பிறகுதான் ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. அதுவும் ஓரிரு நாட்களில் நடந்துவிடவில்லை. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டே இதற்குத் தேவைப்பட்டது. அந்த தலைகீழ் மாற்றத்தின் விளைவு என்ன தெரியுமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டோர் -7, பிற்படுத்தப்பட்டோர் -29, பார்ப்பனர் அல்லாதார் -4, பார்ப்பனர்கள் -4 ஆக மொத்தம் இது 44. இதில் 4 பேர் மட்டும் தான் பார்ப்பன நீதிபதிகள். இப்போது தானே இந்த 4 பேர். அப்போது 100-க்கு 100 அவாள் தானே.
சரி, கால மாற்றத்தில் எல்லாமே மாறுகிறது. இதில் திராவிடத்தின் பங்கு என்ன இருக்கிறது என்று குறுக்குச் சால் ஓட்டுகிறவர்களுக்கு, இதோ இன்னும் ஒரு புள்ளிவிவரக் குறிப்பு. மேலே பார்த்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் நிலவரம். தில்லி உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 27 நீதிபதிகள். அதில் ஒரே ஒருவர் மட்டும் பிற்படுத்தப்பட்டவர். தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கூட இல்லை. இதற்கு என்ன பதில் சொல்லக்கூடும் நம்மை கேள்வி கேட்பவர்கள்.
திராவிடம் என்ன செய்து கிழித்தது என்று வாய்கிழிய பேசுகிறவர்களே, திராவிடம் பார்ப்பானின் சீட்டைக் கிழித்து உங்களையும், எங்களையும் அதில் அமரவைத்து அழகு பார்க்கிறது. இது போதாதா?


-செல்வேந்திரன் கு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக