புதன், 13 ஆகஸ்ட், 2014


அண்டி பிழைக்க வந்த ஆரியக் கூட்டம்
அனைத்து இடத்தையும் ஆக்கிரமித்து செய்து
மண்ணின் மைந்தர்களை இழி மக்களாக்கியது

தங்களை எவன் இழி மக்களாக ஆக்கினானோ அதே ஆரியக் கூட்டத்தை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான்

அது அவர்களின் பிழை அல்ல. இன்று அல்ல நேற்று அல்ல இது அரசாட்சி காலத்தில் இருந்தே மண்ணின் மைந்தர்களின் வாழ்வில் புகுத்தப்பட்டுள்ளது

பிழைக்க வந்த ஆரிய வந்தேறி கூட்டத்திற்குக் கோயில் கட்டி
கோயில் கருவறையையும் எழுதிக்கொடுத்தான்

மன்னனே அரியணை ஏற வேண்டும் என்றால் கூட
ஆரியப் பார்ப்பான் நாள் பார்த்துக்கொடுக்கும் நிலை இருந்தது.
இன்றைக்கும் மோடி அரசானாலும் ஜெயலலிதா அரசானாலும் அதையே கடைபிடிக்கின்றார்கள்

தன் நாட்டு மக்களுக்குக் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்குப்
பெயர் வைக்கக் கூட ஆரியப் பார்ப்பானே குத்தகை எடுத்துக்கொண்டு தமிழுக்கு முட்டுக்கட்டை போட்டான்-
ஆரிய சமஸ்கிருதப் பெயர் வைத்து!

ஒண்டிப் பிழைக்க வந்த ஆரிய பார்ப்பனக் கூட்டம் மண்ணின்
மைந்தர்கள் வணங்கும் கோயில் கருவறையை
ஆக்கிரமித்தது

அவர்களின் பாட சாலையை ஆக்கிரமித்து
வேத பாடசாலையாக்கி அதையும் தனதாக்கிக்கொண்டது.

நீதி அரசாண்ட மைந்தர்களை "மநு நீதி" என்று
காரணம்காட்டி, இழி மக்களாக்கி
நீதித் துறையை ஆக்கிரமித்தனர் ஆரியப் பார்ப்பனர்கள்

இந்திய மண் முழுவதும் அரசாண்ட திராவிடரை
இன்று ஆரியப் பார்ப்பனியமே அரசாளுன்றது

தமிழர்களே! நம் இனப் பகைவர் யார் என்று
இனம்கண்டு எந்த திசையில் இருந்து வந்தார்களோ
அதே திசையை நோக்கி விரட்டியடிப்போம்
வாருங்கள்!!

                                               

                                           -செல்வேந்திரன் கு-

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

திராவிட எதிர்ப்பும் தமிழ்தேசியமும்







"திராவிட"ர்" என்ற இன அடையாளத்தை 

சற்று தள்ளி வைத்துவிட்டு "திராவிட" அரசியல்

பார்த்தவர்கள் பதவிக்காக ஓட்டு பொருக்கிதான்

அவர்களை கேள்வி கேட்கலாம் 

ஆனால் கேள்வி கேட்ப்பவன் "யோக்கியனாக"

இருந்தால் மட்டுமே

திராவிட அரசியல் செய்தவன் "ர்" என்ற ஒற்றை எழுத்தை

எடுத்துவிட்டு ஓட்டு பொருக்க சென்றார்கள்

ஆனால் கேள்விகேட்கும் "தமிழ்தேசியம்"

தன் இன அடையாளத்தையே "திராவிடர்" என்று 

சொல்லாமல் "தமிழன்" என்று சொல்லி ஓட்டு

பொருக்க போவது அவர்களை விட படு கேவலமான

செயல் அல்லவா

"ஓட்டுக்காக" அவர்கள் "ர்" என்ற வார்த்தையை 

தூக்கி எரிந்தார்கள்

அதே ஓட்டுக்காக நீங்கள் "திராவிடர்" என்ற அடையாளத்தையே

தூக்கி எரிந்துவிட்டீர்கள்

உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்

இன்னும் சொல்லப்போனாம் அவர்களை விட 

நீங்களே மிகவும் மோசமான அரசியல் செய்துகொண்டிருக்கின்றீர்கள்

திராவிடர் என்று கட்சி ஆரம்பித்தால்

தன் இனம் மட்டுமே அந்த இயக்கத்தில் இருக்க முடியும்

என்பதால் திராவிட என்று ஆரம்பித்த கட்சிகள்

மக்களிடையே அதிக ஓட்டு பெற்று பதவி சுகம் அனுபவிக்க முடிந்தது

அதே செயலை நீங்கள் இன்னும் மோசமாக செய்கின்றீகள்

திராவிடர் என்று சொன்னால் ஓட்டுபொருக்க முடியாது என்று

நினைத்து அனைவரும் "தமிழன்" என்று சொல்லி

எல்லா வந்தேரிகளையும் தமிழனாக்க பார்க்கின்றீகள்

இதுதான் உங்கள் "தமிழ்தேசியமா...?

-செல்வேந்திரன் கு-

திராவிடர் ஏன்..?




"பிராமணர்,"பிராமணர் மகாசபை"
வைத்துக்கொள்கிறார்கள் அதனால் அவர்களுக்குப் பெருமையும் உரிமையும் கிடைக்கின்றன.

நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர் ஜாதியானுக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பானின் "தாசி" மக்கள் என்ற பட்டம் தான் கிடைக்கும் அந்தச் சூத்திரத் தன்மையை எரிப்பதையே தமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால்தான். அப்பெயரால் எவ்விதச் சலுகையோ உரிமையோ கிடைக்காததால் தான் அப்பெயரில் உள்ள இழிவு காரணமாகத்தான், அத்தலைப்பில் அதே இழி தன்மையுள்ள திராவிடராகிய முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள்,வைசியர்கள்,
சத்திரியகள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர் , கன்னடியர் , மலையாளிகள் ஆகியவர்கள் எல்லாம் ஒன்று சேர மறுத்து வருகிறார்கள்.

அதனால் தான், நம்மைச் சூத்திரர் என்று கூறிக்கொள்ளாமல் "திராவிடர்" என்று கூறிக்கொள்கிறோம். சூத்திரர் என்பவர்களுக்குத் "திராவிடர்"என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் வேறு யாராவது கூறுவார்களானால், அதை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொண்டு, எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.

நீங்கள் கொடுக்கும் பெயரில், நான் மேலே கூறிய அத்தனை பேரும் ஒன்று சேர வசதியிருக்க வேண்டும். அதில் சூத்திரனல்லாத ஒரு "தூசி"கூடப் புகுந்து கொள்ள வசதியிருக்கக் கூடாது. 

அயலார் புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டும்."திராவிடர்" என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது.

நாம் ஒழிக்கப் பாடுபடும்,"பிறவி"காரணமாக இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை.ஆகவே அவர்களைச் சேர்ந்துக் கொள்வதற்க்குக் காரணம் இல்லை.

"ஆரியராவது, திராவிடராவது அதெல்லாம் இல்லை" என்பீர்கள்.

இங்கே வாருங்கள். பேசாமல் மேல் துண்டு போட்டுக்கொண்டு நாலு வருணத்தாரும் கோயிலுக்குப் போங்களேன் ! பார்ப்பான் உங்களையெல்லாம் ஒரே இடத்தில் விட்டு விட்டு உள்ளே நுழைகிறானா , இல்லையா பாருங்களேன்...!

-தந்தை பெரியார்-

புதன், 6 ஆகஸ்ட், 2014

குழம்பிய குட்டையில் பதவி மீனைப் பிடிக்க எண்ணுகிற 
பார்ப்பன அடிவடிகளான சில தமிழ் தேசியவாதிகள், 
திராவிடத்தை மாயை என்று எழுதியும் பேசியும் வருகின்றனர். 
அவர்களுக்குப் பின்னாலும் சிலர் வரக்கூடும் என்பதால். 
முதலில், ’மானமும் அறிவுமே’ - திராவிடம் கொடுத்த சொத்து தானே. 
அதையும் தாண்டி, உரிமையும் திராவிடத்தின் அருட்கொடை தான். இப்படி மானம், 
அறிவு, உரிமை என்ற இந்த மூன்று தலைப்புகளின் கீழ் விளக்கமாக திராவிடத்தின் பங்கைச் சொல்ல முடியும். சுருக்கமாகச் சொன்னாலே போதுமென்றாலும் ஒன்றைச் சொல்லலாம். அதாவது, நம்மை அப்படிக் கீழ் நிலைக்கு ஆளாக்கிய பார்ப்பனர்களையும் நம்மையும் ஒப்பிட்டு ஒன்றைச் சொல்லலாம்.
அரசு நிர்வாகத்தில் எல்லா பணிகளிலும் இந்த நாட்டுக்குச் சொந்தமில்லாத பார்ப்பனர்களே கோலோச்சி மண்ணின் மக்களான நம்மை காலம் காலமாக வஞ்சித்து வந்த நிலையில், திராவிடர் இயக்கம் வந்த பிறகுதான் ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. அதுவும் ஓரிரு நாட்களில் நடந்துவிடவில்லை. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டே இதற்குத் தேவைப்பட்டது. அந்த தலைகீழ் மாற்றத்தின் விளைவு என்ன தெரியுமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டோர் -7, பிற்படுத்தப்பட்டோர் -29, பார்ப்பனர் அல்லாதார் -4, பார்ப்பனர்கள் -4 ஆக மொத்தம் இது 44. இதில் 4 பேர் மட்டும் தான் பார்ப்பன நீதிபதிகள். இப்போது தானே இந்த 4 பேர். அப்போது 100-க்கு 100 அவாள் தானே.
சரி, கால மாற்றத்தில் எல்லாமே மாறுகிறது. இதில் திராவிடத்தின் பங்கு என்ன இருக்கிறது என்று குறுக்குச் சால் ஓட்டுகிறவர்களுக்கு, இதோ இன்னும் ஒரு புள்ளிவிவரக் குறிப்பு. மேலே பார்த்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் நிலவரம். தில்லி உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 27 நீதிபதிகள். அதில் ஒரே ஒருவர் மட்டும் பிற்படுத்தப்பட்டவர். தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கூட இல்லை. இதற்கு என்ன பதில் சொல்லக்கூடும் நம்மை கேள்வி கேட்பவர்கள்.
திராவிடம் என்ன செய்து கிழித்தது என்று வாய்கிழிய பேசுகிறவர்களே, திராவிடம் பார்ப்பானின் சீட்டைக் கிழித்து உங்களையும், எங்களையும் அதில் அமரவைத்து அழகு பார்க்கிறது. இது போதாதா?


-செல்வேந்திரன் கு-
அனைத்தையும் அனுபவிப்பேன்
ஆனால் "திராவிடம்" வேண்டாம்

சுயமரியாதையோடு
சாலையில் செருப்பை
போட்டுக்கொண்டு நடப்பேன்
ஆனால் "திராவிடம்" வேண்டாம்

ஒரே மேடையில்
அனைவருக்கும் முன்
ஒன்றாக அமருவேன்
ஆனால் "திராவிடம்" வேண்டாம்

தமிழன் தமிழன் என்று
கத்துவேன் "தமிழ்" மொழி
சிதம்பரத்தில் படும்பாட்டை
கண்டுக்கவே மாட்டேன்
ஆனால் "திராவிடம்" வேண்டாம்

உனக்கு பெயர்தான் "நடை பிணமடா" நாயே


                   -செல்வேந்திரன் கு-

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

1936 ல் தமிழகத்தில் உள்ள உணவகங்களில்...

பஞ்சமர்களும், நாய்களுக்கும், பெரும் நோய்காரர்களும், அனுமதி கிடையாது என்று எழுதி வைத்திருந்தார்கள்.

அப்போது "நாம் தமிழர்" என்று எவரும் சொல்லவில்லையே ஏன்...?


முகநூலில்...https://www.facebook.com/celventiran.ku/posts/779323302128362

எம் மாவீரர்களுக்கு வீர வணக்க உறுதி மொழியுடன்

ஈழ மண்ணில்
ஈரம் இல்லாத
போது கூட
விதையாய் விழுந்த
வித்துக்கள் நீங்கள்

ஈரம் இல்லாத
போது கூட
அம் மண்ணில்
ஈழ பயிரை
விளைய வைத்தீர்கள்

அருவடைக்காக ஆயுதம்
ஏந்தி அணிவகுத்தீர்கள்

இந்திய வேலியே
ஈழ பயிரை மேய்ந்தது

விளைந்த பயிற்றில்
சிறவி போல விழுந்த
சிங்களவன்

ஈழ பயிரை வளர்க்க
நீங்கள் சிந்தியது
தண்ணீர் இல்லை
கண்ணீரும் இல்லை
கண்கள் வறண்டு
போனதால் சிந்தியது
உங்கள் செண்ணீரே

செண்ணீரில் விளைந்ததால்தானோ
எம் ஈழ மலர்கள் கூட
சிவப்பாய் உள்ளன

நீங்கள் சிந்திய செண்ணீர்
ஒவ்வொரு துளியாக
ஒன்று சேர்ந்து
ஒருநாள் காட்டாறாய்
எழுந்து நிற்க்கும்

இதோ நாமும் துணை
நிற்ப்போம்
ஒன்று சேர்ந்து
சுனாமியாவோம்
சூரியனையே மறைக்க
அலையாய் எழுவோம்

எழ எழ எம்
எதிரியின் மரண
ஊளை,,,,,,,

தூங்கும்
எம் மாவீரர்களைத்
தாலாட்டடும்